புதிய நீதிமன்ற கட்டுமான பணிகள்; சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சோளிங்கர் அருகே புதிய நீதிமன்ற கட்டுமான பணிகளை சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே பாண்டியநல்லூர் பகுதியில் ரூ.7 கோடியே 40 லட்சத்தில் புதிய நீதிமன்ற கட்டுமான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சம்பத் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி கலந்து கொண்டு புதிய நீதிமன்ற கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இங்கு நீதிமன்ற கட்டிடங்கள், நீதிபதி குடியிருப்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், ஜெனரேட்டர் அறை மற்றும் அனைத்து வசதிகளும் கூடிய கட்டிடம் கட்டப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பெல்.கார்த்திகேயன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நரசிம்மன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் விஜயன், நகரச் செயலாளர் ராமு, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஆதிமூலம், பரவத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story