குடும்பத் தகராறு ஊர்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறில் ஊர்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை,
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 30). இவர், வடபழனி போலீஸ் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக பணிபுரிந்து வந்தார்.
தட்சிணாமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட் களாக சொத்து விவகாரம் தொடர்பாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்ச லில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் தட்சிணா மூர்த்தியின் மனைவி உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தட்சி ணாமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story