கொண்டாநகரம் பஞ்சாயத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டும்: கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை


கொண்டாநகரம் பஞ்சாயத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டும்: கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2020 10:45 PM GMT (Updated: 6 Feb 2020 6:34 PM GMT)

கொண்டாநகரம் பஞ்சாயத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடையை திறக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள், அங்கு முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டர் ஷில்பாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கொண்டாநகரம் பஞ்சாயத்து பகுதியில் பல கட்ட போராட்டத்துக்கு பிறகு கடந்த 2006-ம் ஆண்டு ரேஷன் கடை கட்டப்பட்டது. கடை கட்டி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த ரேஷன் கடை திறக்கவில்லை. இது குறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த ரேஷன் கடை கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடையாவது திறக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story