பா.ஜனதாவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் மசிய மாட்டார் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


பா.ஜனதாவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் மசிய மாட்டார் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2020 5:45 AM IST (Updated: 7 Feb 2020 12:37 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் மசிய மாட்டார் என புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

திருவாரூர்,

புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவாரூருக்கு நேற்று வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டில் அமைதி குலைந்திருப்பதை பற்றி பா.ஜனதா கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பிரதமர் மோடி மற்றும் அமித்‌ஷாவின் குரலை எதிரொலித்து வருகிறார். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க பா.ஜனதா நினைக்கிறது.

அதற்கு ரஜினிகாந்த் துணை போகிறார். இதில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் அங்கமாக செயல்படுவது தெரிய வருகிறது. பா.ஜனதா அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது பல்வேறு அமைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.

மசியமாட்டார்

பா.ஜனதாவின் தூண்டுதல் பேரில் தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. நடிகர் விஜய்யை மிரட்டி பா.ஜனதாவிற்கு ஆதரவாக செயல்பட வைக்கும் முயற்சி தான் இது. ஆனால் நடிகர் விஜய் பா.ஜனதாவின் மிரட்டலுக்கு மசிய மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story