சங்கராபுரம் ஊராட்சி தலைவியாக 2 பெண்களுக்கு சான்று: 2-வதாக வழங்கிய வெற்றிச்சான்றை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
சங்கராபுரம் ஊராட்சி தலைவியாக 2-வதாக வழங்கப்பட்ட வெற்றிச்சான்றை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
மதுரை,
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டேன். டிசம்பர் மாதம் 30-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. எங்கள் கிராமத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 599 வாக்காளர்கள் உள்ளனர். 11 ஆயிரத்து 906 வாக்குகள் பதிவாகின. கடந்த மாதம் 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. அன்று இரவு 8 மணியளவில் நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து என்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் நான் 5,871 வாக்குகளும், பிரியதர்ஷினி 5809 வாக்குகளும் பெற்றதாக அறிவித்தார்கள்.
எனவே நான் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுநாள் காலையில் பிரியதர்ஷினியும் ஊராட்சி தலைவராக வெற்றியடைந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்ட தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஆளுங்கட்சி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தானும் வெற்றி பெற்றதாக பிரியதர்ஷினி சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே பிரியதர்ஷினி ஊராட்சி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும். அவர் பதவி ஏற்க அனுமதிக்கக்கூடாது என் றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இடைக்கால தடை
இந்த வழக்கை ஏற்கனவே அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள், ஊராட்சி தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காத தடை விதித்தனர்.
ஏற்கனவே விசாரணை நடந்தபோது, அரசு தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, “வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாக எதிர்மனுதாரர் ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டபோது, மனுதாரரை விட பிரியதர்ஷினி கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது“ என்றனர்.ஆனால் அரசு தரப்பு வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுத்து, தேர்தல் விதிகளின்படி ஒருவர் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கினால், அதுவே இறுதியானது என கருத்து தெரிவித்து இருந்தனர்.
2-வதாக வழங்கிய சான்றிதழ் ரத்து
இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் தீர்ப்பளித்தனர். அதில், “சங்கராபுரம் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக பிரியதர்ஷினிக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கராபுரம் ஊராட்சி தலைவியாக முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story