தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டி 6¼ ஆண்டுகளாக போராடி வரும் கட்டிட தொழிலாளி
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி வேண்டி 6¼ ஆண்டுகளாக கட்டிட தொழிலாளி போராடி வருகிறார். அவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து முறையீடு செய்தார்.
நாகர்கோவில்,
குழிக்கோடு அருகே நெடுவிளையை அடுத்த வண்டாவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் குமார் (வயது 39). இவருடைய மனைவி மேரி சுஜா (33). இவருக்கு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டேனி ஸ்டெனோ மகன் பிறந்தான். அவனுக்கு அந்த மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையின் காரணமாக இரண்டு கண்களின் பார்வையும் பறிபோனதோடு, அவனால் உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும் ஏற்பட்டது. தற்போது அவனுக்கு 8 வயதாகிறது. டென்னிஸ்குமாரின் வீடு நான்கு வழிச்சாலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், தற்போது அவர் கேரளாவில் திருச்சூர் அருகே ஒல்லூர் என்ற பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
டென்னிஸ் குமார் தனது மகனை பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டுபோய் சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது மகனுக்கு கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சைக்கு நீதி கிடைக்க வேண்டி டென்னிஸ் குமார் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மதுரை மருத்துவக்கல்லூரியில் டேனி ஸ்டெனோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தனது மகனுக்கு சரியான சிகிச்சை அளித்து அவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் கருணைக்கொலை செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி தரவேண்டும் என்று கோரி டென்னிஸ் குமார் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து போராடி வந்தார்.
விசாரணை
இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டென்னிஸ்குமாரை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், டென்னிஸ்குமார் தனது மகனுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை தொடர்பாக 29 கோரிக்கைகளை முன்வைத்தார். அதுதொடர்பாக ஒரு குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதன்படி விசாரணை நடத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் கடந்த 15-6-2018 அன்று விசாரணை நடந்தது. இதற்காக சென்னையில் இருந்து மருத்துவ பணிகள் இயக்குனரக கூடுதல் இயக்குனர் ருக்மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணைக்கு வந்திருந்தனர்.
விசாரணையின்போது டென்னிஸ்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆஜரானார். தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படும் மார்த்தாண்டம் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்களும் ஆஜராகி, டேனி ஸ்டெனோவுக்கு அளித்த சிகிச்சையின் விவரங்களை விளக்கினார்கள். இந்த விசாரணை 3 மணி நேரம் நடந்தது. விவரங்களை சேகரித்த விசாரணைக்குழு அதன் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்வதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு விசாரணைக்குழு தலைமை அதிகாரி ருக்மணியை, டென்னிஸ்குமார் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 29 கோரிக்கைகளுக்கு பதில் கேட்டுள்ளார். 4 மாதங்களான பின்னரும் பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு டென்னிஸ்குமார் வைத்த 29 கோரிக்கைகளில் 24 கோரிக்கைகளுக்கு தான் பதில் தந்ததாகவும், முக்கியமான 5 கோரிக்கைகளுக்கு பதில் தரவில்லை என்றும் தெரிகிறது.
துணை முதல்-அமைச்சரை சந்தித்தார்
6¼ ஆண்டுகளாக போராடியும், தங்களுக்கு நீதி கிடைக்காததாலும், பலமுறை தலைமைச் செயலகம் வந்து தீர்வு கிடைக்காததாலும் கடந்த 3-ந் தேதி டென்னிஸ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை சென்ற அவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து மனு அளித்தார். மேலும் சரியான நீதி மற்றும் தீர்வு கிடைக்கும் என நம்பி வந்துள்ளோம், ஆகவே தங்களால் இயன்ற உதவியை செய்து தருமாறு துணை முதல்-அமைச்சரிடம், டென்னிஸ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
அந்த மனுவை படித்து பார்த்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டென்னிஸ்குமாரின் மனு மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
அதையடுத்து துணை முதல்-அமைச்சரின் பரிந்துரை கடிதத்துடன் கூடிய மனுவை நேற்று முன்தினம் டென்னிஸ்குமார் தனது மனைவி குழந்தையுடன் வந்து நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தை சந்தித்து கொடுத்தார்.
அவர் இதுதொடர்பாக தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும், விசாரணைக்கு அழைக்கும்போது நீங்கள் சென்று அவரிடம் விளக்கம் அளிக்கும்படியும் கூறி டென்னிஸ்குமாரை அனுப்பி வைத்தார்.
இதையடுத்து நாகர்கோவிலில் டென்னிஸ் குமார், தக்கலை துணை சூப்பிரண்டு அழைப்புக்காக காத்திருக்கிறார்.

Related Tags :
Next Story