மாவட்ட செய்திகள்

கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது + "||" + Man arrested for theft of sand near Kandhamangalam

கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன் மகன் ஏழுமலை(57). இவர் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் மணல் திருடி விற்பனை செய்வதும், தடுக்கச் சென்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிப்பதும் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தாராம். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


குண்டர் தடுப்பு சட்டம்

மேலும் அவரது குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அண்ணாதுரை, அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கண்டமங்கலம் போலீசார், ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் உள்ள அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்
பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது
சேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
5. சேலத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
சேலத்தில் மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.