சரத்பவார் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கீடு பா.ஜனதா கண்டனம்


சரத்பவார் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கீடு    பா.ஜனதா கண்டனம்
x
தினத்தந்தி 7 Feb 2020 5:19 AM IST (Updated: 7 Feb 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

சரத்பவார் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

புனேயில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு சொந்தமான வசந்த்தத்தா சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ஜல்னா மாவட்டத்தில் 51 ஹெக்டேர் நிலத்தை வழங்க மராட்டிய அரசு முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், சரத்பவார் தலைமையிலான நிறுவனங்களுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கும் அரசாங்க நிலங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன என்றார்.

மறுப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை தேசியவாத காங்கிரஸ் மறுத்து உள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த மந்திரி நவாப் மாலிக் தெரிவிக்கையில், ஜல்னாவில் உள்ள நிலம் விவசாயிகள் நலனுக்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசந்த்தத்தா சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு வாடகைக்கு தான் விடப்பட்டு உள்ளது. விற்பனை செய்யப்படவில்லை என்றார்.

Next Story