மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே விபத்து: தாய்-9 மாத குழந்தை பலி - மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது + "||" + Accident near the ottapidaram: Mother-9-month-old baby kills

ஓட்டப்பிடாரம் அருகே விபத்து: தாய்-9 மாத குழந்தை பலி - மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது

ஓட்டப்பிடாரம் அருகே விபத்து: தாய்-9 மாத குழந்தை பலி - மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தாய், 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்தனர்.
ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வள்ளிநாயகபுரம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 53). கூலி தொழிலாளி. இவருடைய முதல் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். முதல் மனைவி மூலம் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன், மாலா (31) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள். இதில் கடைசி மகன் 9 மாத குழந்தை வெள்ளைச்சாமி.

நேற்று காலையில் மாலா தனது கைக்குழந்தை வெள்ளைச்சாமியை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். இதனால் காளியப்பன் தனது மனைவி, குழந்தையை பஸ் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

அவர்கள் ஓட்டப்பிடாரம் அருகே கே.சண்முகபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. இதனால் காளியப்பன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தினார். அப்போது பின்னால் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக காளியப்பன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி காளியப்பன் சாலையின் இடதுபுறத்திலும், மாலா தனது குழந்தையுடன் சாலையின் வலதுபுறத்திலும் விழுந்தனர். அப்போது அதே பஸ்சின் சக்கரம் மாலா மற்றும் குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தனது கண் முன்னே மனைவியும், குழந்தையும் இறந்து கிடந்ததை பார்த்து காளியப்பன் கதறி அழுதார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பலியான மாலா, குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தாய், 9 மாத குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் பலி
பெரியபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் கணவர் கண் முன் பரிதாபமாக பலியானார்.
2. சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
3. பட்டிவீரன்பட்டி அருகே, மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. திண்டிவனம் அருகே பயங்கர விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல்: இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலி
திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் இரும்பு கடை அதிபர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
5. கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதி 2 பேர் பலி
பிவண்டி மான்கோலி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.