பொதுவினியோக ஊழியர் சங்க பொதுக்கூட்டம்


பொதுவினியோக ஊழியர் சங்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2020 3:30 AM IST (Updated: 7 Feb 2020 7:08 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பொதுவினியோக ஊழியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில், 

தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கம் குமரி மாவட்டம் கிளை பொதுக்கூட்டம் நாகர்கோவில் கோட்டார் சமூக நலக்கூடத்தில் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் குமரிசெல்வம் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெய்சன் மகேஷ், துணை தலைவர் அருண்ராஜ், செயலாளர் ஜெயசேகர், துணை செயலாளர் பெல்லின் பிரபாகர், பொருளாளர் வினோத், நெல்லை மாவட்ட தலைவர் இளங்கோ உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு திட்டத்தை பொதுமக்கள் பயன்படும் வகையில் அரசின் பொது வினியோக துறையின்கீழ் அனைத்து ரே‌ஷன்கடைகளையும் இணைக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் மூலம் அனைத்து ரே‌ஷன் கடைகளிலும் ரே‌ஷன் பொருட்கள் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக ரே‌ஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கவேண்டும். 

ஏஜென்டுகள் வழங்கும் ரே‌ஷன் மண்எண்ணெய் அளவை வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வழங்கி அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


Next Story