இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்


இரட்டை ரெயில் பாதை பணி: ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 7 Feb 2020 10:00 PM GMT (Updated: 7 Feb 2020 2:36 PM GMT)

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் இருந்து தோவாளை, ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் சாலை உள்ளது. ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்தில், சாலையின் குறுக்கே ரெயில் தண்டவாளம் உள்ளது. அந்த பகுதியில் ரெயில்வே துறையினரால் இருவழிப்பாதையாக மாற்றும் பணி மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த பணிகள் 20–ந் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஆரல்வாய்மொழியில் இருந்து தண்டவாளத்தை கடந்து குமாரபுரம் செல்லும் வாகனங்கள், மற்றும் பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி தோவாளையில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக குமாரபுரம் செல்லும் வாகனங்கள் தேவசகாயம் மவுண்ட் பகுதியில் இருந்து வலதுபுறமாக மாற்றுப்பாதையில் குமாரபுரம் செல்ல ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story