கோவில்பட்டியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 8 Feb 2020 4:45 AM IST (Updated: 8 Feb 2020 2:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடந்த விழாவில் 61 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 61 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர், கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் மணிகண்டன், யூனியன் தலைவி கஸ்தூரி, யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், தலைமை ஆசிரியர் அலெக்ஸ் ஷான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story