படப்பை, அம்மா திட்ட முகாம்


படப்பை, அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 8 Feb 2020 3:41 AM IST (Updated: 8 Feb 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த எறையூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

படப்பை,

முகாமிற்கு குன்றத்தூர் சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நிர்மலா தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் இந்திராணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை கேட்டு 8 மனுக்களும், விதவை உதவித்தொகை கோரி 2 மனுக்களும், மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி ஒரு மனுவும் பட்டா மாற்றம் கோரி ஒரு மனுவும் உள்ளிட்ட 12 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து சமுக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பெற்றுக்கொண்டார். அனைத்து மனுக்களும் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story