தபால் அலுவலக வங்கிகளில் உரிமை கோரப்படாத சேமிப்பு பணம் குறித்த கணக்கு பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது


தபால் அலுவலக வங்கிகளில்   உரிமை கோரப்படாத சேமிப்பு பணம் குறித்த கணக்கு பட்டியல்   பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 8 Feb 2020 3:52 AM IST (Updated: 8 Feb 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

தபால் அலுவலக வங்கிகளில் உரிமை கோரப்படாத சேமிப்பு பணம் குறித்த பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

சென்னை,

தபால் அலுவலக வங்கிகளில் இருக்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பாளர்களின் உரிமை கோரப்படாத பணத்தை நிர்வகிப்பது மற்றும் கையாள்வது குறித்து மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது. இந்த விதிகளின்படி, உரிமை கோரப்படாமல் இருக்கும் சேமிப்பு கணக்குகளில் உள்ள பணம் குறித்த கணக்குகளின் விவரங்கள் பகிரங்கமாக அறிவிக்கை செய்யப்படும்.

இதன்படி, தபால்துறை இவ்வகை கணக்குகளின் விவரங்களை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை பொது மக்கள் அறியும் வகையில் தபால் அலுவலகங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பத்திரிகை தகவல் அலுவலக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story