புதுச்சேரியில் மூடுவிழா அரசு நடக்கிறது ரங்கசாமி கடும் தாக்கு
புதுச்சேரியில் மூடுவிழா அரசு நடக்கிறது என்று ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி,
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 10-வது ஆண்டுவிழா ரெட்டியார்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து தலைவர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் ரங்கசாமி பேசியதாவது:-
நமது இயக்கம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. அப்போது மக்களுக்கு தேவையான எல்லா திட்டங்களையும் நிறைவேற்றினோம். அனைத்து சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக திட்டங்கள் தீட்டினோம். இதன் மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றின் தரம் உயர்ந்தது.
அப்போதுதான் மேம்பாலங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டன. 5 ஆண்டுகள் புதுவையில் முழுமையான வளர்ச்சியை தந்தோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு மக்களின் பேராதரவினை பெற்றோம். மக்கள் ஆதரவு நமக்கு எப்போதும் உள்ளது. அப்போது மேலும் பல இடங்களை பெற்றிருக்க முடியும். சில சூழ்நிலைகளால் அதை பெற முடியவில்லை.
புதுவையில் இப்போது காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் என்ன நடந்துள்ளது? கூட்டணி கட்சி தலைவர்கள் கூட மேடைபோட்டு இந்த ஆட்சியை மோசமாக திட்டுகிறார்கள். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வும் ஆட்சியை விமர்சிக்கிறார். கவர்னரிடம் ஊழல் பட்டியல் கொடுக்கிறார்.
கூட்டணி கட்சி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. எதிர்க்கும் மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் கேட்கிறார்கள். தேர்தல் வாக்குறுதி எதையும் ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. யார் மீதாவது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். மூடுவிழா கொண்டாடும் அரசாகத்தான் இந்த அரசு உள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பெட்ரோல் பங்குகள் கொடுத்தோம். ஆனால் அவற்றை இந்த ஆட்சியாளர்கள் மூடிவிட்டார்கள். அரசு சார்பு நிறுவனங்களுக்கு மதுபான பார் கொடுத்தோம். ஒரு பார் ரூ.4 கோடி வரை விலைபோகிறது. ஆனால் இவர்கள் அதையும் மூடிவிட்டார்கள். பாப்ஸ்கோ, பாசிக் என அனைத்து அரசு சார்பு நிறுவனங்களையும் மூட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்காக ஒரு நபர் கமிஷன் அமைத்தார்கள். அந்த கமிஷன் என்ன செய்யவேண்டும்? நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை லாபத்தில் இயங்க செய்யத்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதை விடுத்து மூட சொல்கிறது. அப்படியானால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? என்ஜினீயரிங் படித்துவிட்டு ரூ.6 ஆயிரம் சம்பளத்தில் வேலைகிடைக்குமா? என்று மாணவர்கள் கெஞ்சி வருகிறார்கள்.
அரசு சார்பு நிறுவன பெட்ரோல் பங்குகள், மதுபார்களை மூடிவிட்டு அதை வேண்டியவர்களுக்கு கொடுக்க பேரம் பேசுகிறார்கள். பாண்லே நிறுவனம் லாபத்தில்தான் இயங்கியது. இப்போது அதிலும் நஷ்டம் என்கிறார்கள். பஞ்சாலைகளை மூடுகிறார்கள். புதுவை அரசு எந்த மக்களுக்கும் பயனில்லாத அரசாக உள்ளது. இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
திருபுவனை தொகுதியில் கோபிகா எம்.எல்.ஏ. தலைமையில்என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தொண்டர்கள்பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதன்பின்மதகடிப்பட்டில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிதலைமைஅலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் கோபிகா எம்.எல்.ஏ. ஊர்வலமாக வந்தார். அங்கு கட்சி தலைவர் ரங்கசாமிக்கு மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.

Related Tags :
Next Story