ஆரணியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கோட்ட மாநாடு
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் செய்யாறு கோட்ட மாநாடு ஆரணியில் நடந்தது.
ஆரணி,
செய்யாறு கோட்ட தலைவர் எல்.சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் எஸ்.வெங்கடாசலம், பி.ராஜா, எஸ்.பழனி, துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணி, ஏழுமலை, தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் கே.கே.ராமு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ம.சண்முகராஜா, துணை பொது செயலாளர் கா.பெருமாள், துணைத்தலைவர் பி.சண்முகசுந்தரம், செயலாளர்கள் ஆர்.சண்முகம், தமிழ்செல்வன், முன்னாள் மாநில பொருளாளர் எஸ்.ராஜவேல், முன்னாள் மாநில செயலாளர் எஸ்.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மாநாட்டில் வருகிற மே மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், அரசுப் பணியிடங்களை ஒதுக்கிட வகை செய்யும் பணியாளர்கள் சீரமைப்பு குழுவை கலைக்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியாளர்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். சாலை பணியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பி வேலையில்லா இளைஞர்களுக்கு அரசுத் துறையில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உட்கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story