விவசாய பெருவிழாவில் 5 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள்


விவசாய பெருவிழாவில் 5 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள்
x
தினத்தந்தி 9 Feb 2020 3:45 AM IST (Updated: 8 Feb 2020 9:21 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடைபெறும் விவசாய பெருவிழாவில் 5 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலசபாக்கம், 

சேலம் தலைவாசல் பகுதியில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

விழாவில் கலந்து கொள்ள திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள், விவசாயிகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டு உள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பால் உற்பத்தியாளர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி செய்து வருகிறார்.

அப்போது பொது மேலாளர் உலகநாதன், துணை பொது மேலாளர் நாச்சியப்பன், மேலாளர்கள் முனுசாமி, காளியப்பன், ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story