மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு தீர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் போளூர், செய்யாறு, வந்தவாசி, கலசபாக்கம், ஆரணி, செங்கம் ஆகிய பகுதியில் சார்பு நீதிமன்றங்களில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் சிறப்பு எஸ்.சி., எஸ்.டி. வழக்கு விசாரணை கோர்ட்டு நீதிபதி காயத்திரி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கர், சார்பு நீதிபதி சுமதி, மோட்டார் வாகன விபத்து விசாரணை சிறப்பு நீதிபதி உள்பட நீதிபதிகள், மாஜிதிரேட்டுகள் கலந்து கொண்டனர்.
இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் என சுமார் 8 ஆயிரத்து 819 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்து 94 ஆயிரத்து 957 இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story