தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களுடன் நில சீர்திருத்தம் தொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட கலெக்டர்களுடன் நிலசீர்திருத்தம் தொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கான நில சீர்திருத்த பொருள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நிலசீர்திருத்த ஆணையருமான ஜெக்மோகன்சிங்ராஜூ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர்கள் கோவிந்தராவ்(தஞ்சை), ஆனந்த்(திருவாரூர்), பிரவீன் நாயர்(நாகை), மற்றும் நில சீர்திருத்த இணை இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், உதவி கலெக்டர்கள், வருவாய் கோட்ட அலுவலர்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பகிர்ந்தளிக்க வேண்டும்
கூட்டத்தில் ஜெக்மோகன்சிங்ராஜூ பேசுகையில், ‘‘நிலசீர்திருத்த சட்டத்தில் நிலுவை இனங்களின் முன்மொழிவுகள் அனுப்பி வைக்க வேண்டும். பூமிதான வாரிய நிலங்களில் உறுதியாக்கம், பத்திரப்பதிவு, பட்டா மாறுதல், மற்றும் அரசு வழிகாட்டி மதிப்பு, பதிவேட்டில் பூமிதான நிலங்களை பூஜ்ஜியம் மதிப்பில் பதிவு செய்தல் ஆகியவை குறித்து முடிவு செய்ய வேண்டும். பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ள பூமிதான நிலங்களை தகுதியான நபர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளின் செலவு தொகைகளை ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஓதுக்கீடு குறித்த முன்மொழிவுகளை அனுப்பி வையுங்கள்’’என்றார்.

Related Tags :
Next Story