துப்புரவு பணிகளை எந்திரத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தல்
துப்புரவு பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் துப்புரவு பணிகளை எந்திரம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம், தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தினார்.
சிவகங்கை,
தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மனி நேற்று சிவகங்கைக்கு வந்தார். பின்னர் சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.
கூட்டத்திற்கு அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வீடு, கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மனி கேட்டறிந்தார்.
எந்திரம் மூலம் பணி
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நகர் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப் பகுதிகளை தூய்மையாக பராமரிப்பதில் துப்புரவு பணியாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகாம் நடத்த வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதுடன், அவர்களை பாதுகாக்கும் விதமாக துப்புரவு பணிகளை 100 சதவீதம் எந்திரம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்புரவு பணியாளர்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணிகள் மேற்கொள்ளும்போது கையுறைகள், காலணி, பாதுகாப்பு முகமூடி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு மத்திய அரசு நிலையான ஊதியம் வழங்கும் வகையில் ஒவ்வொரு ஒப்பந்த பணியாளருக்கும் மாதாந்திர ஊதியம் ரூ.7,750-ல் இருந்து ரூ.14,500 ஆக உயர்த்தி வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மனுக்கள்
மாதம் ஒரு நாள் விடுப்புடன் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு நல்ல தரமான கல்வி கிடைக்கச் செய்வதுடன், வீடு இல்லாதவர்களை கண்டறிந்து வீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிந்து, நகராட்சிகளுக்கான மண்டல ஆணையர் ராஜன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், உதவி இயக்குனர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story