சுற்றுலாவுக்கு முக்கியமான பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் தலைமை செயலாளர் விருப்பம்
புதுச்சேரியில் சுற்றுலாவுக்கு மிகவும் முக்கியமான பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் விருப்பம் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறையும், கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையும் இணைந்து பாரம்பரிய பாதுகாப்பு-யுனெஸ்கோ நியமனத்திற்கான பாதை என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.
இந்த கருத்தரங்கில் அரசு செயலாளர் மகேஷ் வரவேற்று பேசினார். தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தலைமை செயலாளர்
புதுவையில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடங்கள் சுற்றுலாவுக்கு முக்கியமானவை. அவை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த கட்டிடங்களை பாதுகாக்க என்ன தேவை என்பதை பொறியாளர்கள் கண்டறியவேண்டும்.
நமக்கு முன்பு உள்ள சவால் அந்த கட்டிடங்களை எவ்வாறு நீண்ட காலத்துக்கு பாதுகாக்கப்போகிறோம் என்பதுதான். புதுவையில் ஒயிட் டவுன் எனப்படும் பகுதி சுற்றுலாவுக்கு மிகவும் முக்கியமானது.
இதனை பொதுமக்களின் ஒத்துழைப்போடுதான் பாதுகாக்க முடியும். அவர்களின் பங்களிப்புதான் இதில் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
யுனெஸ்கோ இயக்குனர்
நிகழ்ச்சியில் யுனெஸ்கோ இயக்குனர் எரிக்பால்ட் கலந்துகொண்டு உலக பாரம்பரிய நகரத்தின் கீழ் நியமனத்திற்கான வழிமுறைகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து இந்தியாவில் பாரம்பரிய அடிப்படையிலான நகர வளர்ச்சி திட்டங்கள் என்ற தலைப்பில் சஸ்வத், பாரம்பரிய பாதுகாப்பில் இன்டேக் என்ற பொருளில் அசோக் பாண்டா, அருள் ஆகியோர் பேசினார்கள்.
முடிவில் தலைமை நகர வடிவமைப்பாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story