மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் சோதனை + "||" + Police raid Pudukkottai district jail

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் சோதனை

புதுக்கோட்டை மாவட்ட சிறையில் போலீசார் சோதனை
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை மற்றும் பார்ஸ்டல் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் உத்தரவின்பேரில் நேற்று புதுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


1 மணி நேரம்

அப்போது போலீசார் கைதிகளின் ஒவ்ெவாரு அறையாக சென்று, அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். குளிக்கும் அறை, கழிவறைகள் போன்றவற்றிற்கும் சென்று, போலீசார் சோதனை நடத்தினார்கள். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்கள் உள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிப்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
3. திருவாரூர் மாவட்டத்தில், 144 தடை உத்தரவு: 1,200 போலீசார் பாதுகாப்பு
144 தடை உத்தரவையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4. திருப்பூரில் குடிபோதையில் தகராறு: கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
திருப்பூரில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. கொரோனா சோதனை: 316 பயணிகள் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு
வெளிநாடுகளில் இருந்து வந்த 316 பயணிகளின் கையில் தனிமைப்படுத்தும் முத்திரை குத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.