பொறையாறு அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.39 லட்சத்தில் புதிய ஓய்வறை கட்டிடம் அமைச்சர் திறந்து வைத்தார்
பொறையாறு அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.39 லட்சத்தில் புதிய ஓய்வறை கட்டிடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
பொறையாறு,
பொறையாறில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வளாகத்தில் இருந்த பழமையான ஓய்வறை கட்டிடம் கடந்த 20.10.2017 அன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பிரபாகரன், மணிவண்ணன், தனபால், பாலு, ராமலிங்கம், சந்திரசேகர், முனியப்பன், அன்பரசன் ஆகிய 8 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஊழியர்களுக்கான புதிய ஓய்வறை கட்டிடம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். பவுன்ராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் மாரியப்பன் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு புதிய ஓய்வறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சிறந்த மாநிலம் தமிழகம்
பொறையாறில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக ஓய்வறை கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியான சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து உள்ளது. இதுபோன்ற பழமையான கட்டிடங்கள் இருந்தால் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் பஸ், கார், ஆட்டோ போன்ற வாகனங்களை பேட்டரி மற்றும் மின்சாரத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 மாநிலங்களில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தை தலைசிறந்த முதல் மாநிலமாக மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. தமிழக அரசின் சிறந்த ஆட்சிக்கு இதுவே எடுத்துக்காட்டா கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் சுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயபாலன், முன்னாள் தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணசாமி, நாகை கோட்ட மேலாளர் செந்தில்குமார், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண், தியாகராஜன், பொறையாறு அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயக்குமார், அண்ணா தொழிற்சங்க தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் ராஜா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story