கும்பகோணம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஊர்வலம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


கும்பகோணம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஊர்வலம் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 4:30 AM IST (Updated: 10 Feb 2020 1:02 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிடைமருதூர்,

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கும்பகோணம் அருகே முருக்கன்குடி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலம் நேற்று காலை தொடங்கியது. முருக்கன்குடி ஜாமியா மஸ்ஜித் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து கடைவீதியில் முடிவடைந்தது.ஊர்வலத்தில் ஜாமியா மஸ்ஜித் நாட்டாண்மை இஸ்மத்பாட்சா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் இப்ராஹிம், திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் திரிபுரசுந்தரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைத்தலைவர் ஜெகபர்அலி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story