மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி + "||" + Interview with Velmurugan, Founder of Tamil Nadu Livelihood Party

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி

நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி
நடிகர் விஜய்க்கு ஆதரவாக இருப்போம் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் பேட்டி.
தர்மபுரி,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, மாவட்ட செயலாளர் டாக்டர் முனிரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். கூட்ட முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக கவர்னருக்கு அனுப்பி 500 நாட்கள் ஆகியும் இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும், சட்டசபையில் மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் இது குறித்து கவர்னர் முடிவு எடுக்காவிட்டால் மத்திய அரசு இந்த கவர்னரை திரும்ப பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிராக தர்மபுரி மாவட்டம், சிவாடியில் பெட்ரோல் கிடங்கு அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை தமிழக வாழ்வுரிமை கட்சி அனுமதிக்காது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வருமான வரித்துறையினர் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஒரு நிலைப்பாடும், விஜய்க்கு ஒரு நிலைப்பாடும் எடுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு எங்கள் கட்சியினர் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள்; நலம் பெற்ற பெண் பேட்டி
கொரோனாவிடம் இருந்து தப்ப ஒரே வழி வீட்டில் இருங்கள் என சிகிச்சைக்கு பின் நலம் பெற்ற பெண் பேட்டியளித்து உள்ளார்.
2. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
3. குற்றவாளிகள் நாளை காலை தூக்கில் இடப்படுவார்கள்; நிர்பயா வழக்கறிஞர் பேட்டி
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரிய குற்றவாளிகளின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
4. மின்வாரியத்தில், முதற்கட்டமாக கேங் மேன் பணிக்கு 5 ஆயிரம் பேர் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்வாரியத்தில் கேங் மேன் பணிக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம்
குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம் என காதர் மொகிதீன் கூறினார்.