மாவட்ட செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு + "||" + The case against the plaintiff who married the little girl

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
தூத்துக்குடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,

சேலம் மாவட்டம் மகுடம் சாவடியை சேர்ந்தவர் தனபால்(வயது 25). இவருக்கும், தூத்துக்குடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி எட்டயபுரம் வெட்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை யூனியன் சமூக நலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.


போலீசார் வழக்கு

அதன்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, சிறுமியை திருமணம் செய்த தனபால், சிறுமியின் தாய், புரோக்கர்கள் சுதந்திரா(60), செல்லம்மாள் மற்றும் மணமகனின் பெற்றோர் ஆகிய 6 பேர் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியின் தாய் மற்றும் புரோக்கர் சுதந்திரா ஆகியோரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2. தனிமை அறிவுரையை மீறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு; தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பியவர்
தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பிய இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி, வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அதனை மீறியதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
3. தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறியதாக கூறி, 4 ஆயிரத்து 100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.
5. அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து பெண் போலீசை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு அதிகாரியின் வாகன கண்ணாடியை உடைத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை தாக்கிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.