நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வெளியேற வலியுறுத்தி நவநிர்மாண் சேனா பிரமாண்ட பேரணி ராஜ் தாக்கரே தலைமையில் நடந்தது
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்கள் வெளியேற வலியுறுத்தி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தலைமையில் மும்பையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
மும்பை,
மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தீவிர இந்துத்துவா கொள்கைக்கு மாறி புதிய அவதாரம் எடுத்து உள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த மாதம் 23-ந் தேதி அவர் கட்சி கொடியை மாற்றினார். முழுமையாக காவி வண்ணத்தில் அமைந்த அந்த கொடியின் மையத்தில் சத்ரபதி சிவாஜி மன்னரின் ராஜ முத்திரை இடம் பெற்று உள்ளது.
இந்தநிலையில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்ற வலியுறுத்தி நேற்று நவநிர்மாண் சேனா சார்பில் மும்பை யில் ராஜ் தாக்கரே தலைமையில் பிரமாண்ட பேரணி நடந்தது.
போராட்டத்தில் கலந்துகொள்ள ராஜ் தாக்கரே, மனைவி சர்மிளா, சமீபத் தில் தீவிர அரசியலில் குதித்த அவரது மகன் அமித் தாக்கரேவுடன் வந்தார். முன்னதாக அவர் தாதரில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு இருந்து காரில் பேரணி தொடங்கும் மெரின் டிரைவ் பகுதியில் உள்ள இந்து ஜிம்கானா பகுதிக்கு சென்றார். அங்கு இருந்து அவர் பகல் 12 மணியளவில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஆசாத் மைதானம் நோக்கி சென்றார்.
ராஜ் தாக்கரே காரில் மெதுவாக செல்ல, தொண்டர்கள் அவருடன் பேரணியாக சென்றனர். பேரணி காரணமாக நேற்று மெரின் டிரைவ் முதல் சி.எஸ்.எம்.டி. வரையிலான 4 கி.மீ. தூரத்துக்கு சாலை எங்கும் நவநிர்மாண் சேனா தொண்டர்கள் தலையாகவே காணப்பட்டது. அவர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களை உடனடி யாக வெளியேற்ற வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து ராஜ் தாக்கரே மும்பை ஆசாத் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் முன் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:-
இன்று உங்கள் கூட்டத்தை பார்த்து எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. எனது பேரணிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நான் வணங்குகிறேன். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இதுவரை யில் முஸ்லிம்கள் தான் மும்பையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஏன் என்று தெரியவில்லை. இந்த சட்டம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லையா?.
வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் இல்லாத மக்கள் அந்த நாட்டின் மதரீதியான கொடுமைகளை அனுபவித்து, கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பே இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருந்தால், அவர் களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது. இது குடியுரிமை சட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதுபற்றி அறியாமல் முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எங்கள் நாடு என்ன உங்களுக்கு (சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்கள்) தர்ம சத்திரமா?. அனைவருக்கும் குடியுரிமை வழங்குவதை நான் ஏற்கமாட்டேன்.
மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை விலக்கியதை, முதலில் நான் தான் வரவேற்றேன். தற்போது பா.ஜனதா அரசு ராமர் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே உயிரோடு இருந்தால் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, முதலில் தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருப்பார்.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பாகிஸ்தான் நாட்டில் தான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டார். மும்பையில் குண்டுவெடிப்பு நடத் திய தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் தஞ்சம் புகுந்து உள்ளார். இதனை வைத்து நீங்கள் கணித்து இருக்க வேண்டும், பாகிஸ்தான் எப்படிப்பட்ட பயங்கரவாத நாடாக உள்ளது என்று.
நமதுநாட்டில் சுமார் 2 கோடிக்கு அதிகமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்து உள்ளனர். இவர்களை நாடு கடத்துவதே நமது முக்கிய நோக்கம் ஆகும்.
நாட்டில் குடிரிமை சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்துக்கு, இந்த பேரணி தக்க பதிலடி கொடுத்து உள்ளது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால், நாமும் எதிர் போராட்டம் நடத்துவோம். கல்லை தூக்கினால் நாங்களும் கல்லை தூக்குவோம். வாளை தூக்கினால் நாங்களும் வாளால் பதிலடி கொடுப்போம். இதற்கு நவநிர்மாண் சேனா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் ஆக்ரோஷமாக பேசினார்.

Related Tags :
Next Story