வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
மளிகை கடை வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். ராஜேந்திரன் நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றார். அவரது மனைவி கதவை திறந்து வைத்தபடி தூங்கியதாக தெரிகிறது.
அப்போது யாரோ மர்மநபர், திறந்து கிடந்த வியாபாரி ராஜேந்திரனின் வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சத்தையும் நைசாக திருடி சென்று விட்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் திறந்து கிடந்த ராஜேந்திரனின் வீட்டுக்குள் புகுந்த காட்சி பதிவாகி உள்ளது.
அந்த மர்ம நபர்தான் நகை-பணத்தை திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story