கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:00 PM GMT (Updated: 10 Feb 2020 7:29 PM GMT)

கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன், செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் கலந்துகொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், போதுமான அறுவடை எந்திரங்களை அரசு உடன் வழங்கி, அறுவடை எந்திர தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்குப்பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தடுத்து நிறுத்த வேண்டும்

மாவட்டம் முழுவதும் முழுமையான பயிர் இன்சூரன்ஸ் கணக்கெடுப்பை காலத்தில் முறையாக எடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் சிட்டா, அடங்கல் போன்ற சான்றிதழ்கள் கேட்டு கெடுபிடி செய்வதை கைவிட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story