ஸ்ரீபெரும்புதூர் அருகே பரிதாபம்: வேன் கவிழ்ந்து விபத்து; ஊழியர் பலி 5 பேர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தனியார் கம்பெனி ஊழியர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் தாமோதரன் (வயது 26). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியிருந்து அங்குள்ள அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை தாமோதரன் வழக்கம் போல கம்பெனி வேனில் ஊழியர்களுடன் வேலைக்காக சென்று கொண்டிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் சாலையில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி வேன் திடீரென நிலைதடுமாறியது.
இதையடுத்து தறிகெட்டு ஓடிய வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில் வேனில் இருந்த ஊழியர்கள் அய்யோ, அம்மா என்று அலறினார்கள்.
இந்த நிலையில் வேனில் பயணித்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் விபத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 5 ஊழியர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story