திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் கலெக்டர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி காணியம் பாக்கம் கிராமத்தில் 18 இருளர் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திற்கான இலவச வீட்டுமனை பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
ரூ.3 லட்சத்திற்கான காசோலை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த முத்துக் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி புவனேஸ்வரிக்கு வழங்கினார்.
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்க தலைவர் தங்கம்தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் மற்றும் அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story