அமைச்சரின் ஆதரவாளர் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர் கைது


அமைச்சரின் ஆதரவாளர் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 5:02 AM IST (Updated: 11 Feb 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் அருகே அமைச்சரின் ஆதரவாளர் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவர் கைது செய்யப்பட்டார்.

பாகூர்,

கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் சாம்ப சிவம் (வயது 36). இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகித்த இவர் அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இதே பகுதியை சேர்ந்த இவரது மாமா வீரப்பன் கடந்த 2017-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு முக்கிய சாட்சியாக சாம்பசிவம் இருந்தார். இதன் காரணமாகவும், அமைச்சர் கந்தசாமிக்கு ஆதரவாக செயல்பட்டதாலும் எதிர் தரப்பினரால் இவர் கடந்த 31-ந்தேதி கிருமாம்பாக்கத்தில் வைத்து வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கிருமாம்பாக்கம் அமுதன், கூடப்பாக்கம் அன்பு என்ற அன்பரசன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் சாம்பசிவம் கொலைக்கு ஆயுதம், மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய கடலூர் குமார புரத்தை சேர்ந்த பரணி என்ற பரணிகுமார் (29) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சாம்பசிவத்தின் நடமாட்டம் குறித்து குற்றவாளிகளுக்கு உளவு சொன்ன பிரபல ரவுடி சுபாஷ் தொடர்ந்து தலை மறைவாக இருந்து வருகிறார். அவரை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story