மாவட்ட செய்திகள்

செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல் + "||" + Teen informants at seminar on cell phone overdose are more likely to have seizures

செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்

செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்
அதிக நேரம் செல்போன் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருத்தரங்கில் டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,

உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நரம்பியல் துறை தலைவர் கிங்ஸ்லி ஜெபாசிங் வரவேற்றார். தலைமை விருந்தினராக மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கலந்து கொண்டு பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-

மூளைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் பல நோய்கள் உருவாகின்றன. இதில் ஒன்று தான் வலிப்பு நோய். டாக்டர்களின் ஆலோசனைபடி சரியான நேரத்தில் முறைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். பொதுவாக 100-ல் 80 சதவீதம் பேர் வலிப்பு நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

செல்போன்-டி.வி.

அதிக நேரம் செல்போன், டி.வி பார்ப்பதாலும், சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் வலிப்பு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வலிப்பு நோயை சிலர் கொடிய நோய் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. நோய் ஏற்படுவதற்கான காரணம் அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறை அளித்தால் அதனை குணப்படுத்திவிடலாம். அதன்படி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளன.

சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நரம்பியல் துறை சார்ந்த டி.எம்.(நியூராலஜி) பட்டப்படிப்பு உள்ளது. இதேபோல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் துறைக்கு டி.எம்.(நியூராலஜி) கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை இன்னும் சில மாதங்களில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவிகளின் கேள்வி

கருத்தரங்கில் மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் மற்றும் துறை பேராசிரியர்கள், செவிலிய மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாணவிகளின் கேள்விகளுக்கு நரம்பியல் துறை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 41 சதவீதம் குறைவு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இதுவரை 41 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
2. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல்
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.
3. புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று முடிவு எடுப்பதாக நாராயணசாமி தகவல்
தளர்வுகள் குறித்து அரசு அதிகாரி களுடன் முதல்-அமைச்சர் நாராயண சாமி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அமைச்சர்களுடன் பேசி இன்று முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
4. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படாது மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படாது என உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கூறியுள்ளார்.
5. புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று கவர்னர் கிரண்பெடி பகீர் தகவல்
புதுச்சேரியில் ஐந்தில் ஒருவருக்கு தொற்று பரவி உள்ளது என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.