விநாயகர் கோவிலில் அம்மன் சிலை திருட்டு


விநாயகர் கோவிலில் அம்மன் சிலை திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2020 3:00 AM IST (Updated: 11 Feb 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே விநாயகர் கோவிலில் அம்மன் சிலை திருடப்பட்டுள்ளது.

தூசி, 

வெம்பாக்கம் தாலுகா கனிகிலுப்பை கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரம் 25 கிலோ எடையில் அம்மன் சிலை இருந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து அம்மன் சிலையை திருடிச்சென்று விட்டனர். 

இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story