மாவட்ட செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது + "||" + Two arrested for threatening Sub-Inspector

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட  சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் நேற்று திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் திருவள்ளூர் பெரியகுப்பம், ஆயில் மில், சி.வி.நாயுடு சாலை, மசூதி தெரு போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திருவள்ளூர் பெரியகுப்பத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 56), திருவள்ளூர் மசூதி தெருவை சேர்ந்த அனிபா (65) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது 2 பேரும், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து போலீசார் லட்சுமணன், அனிபா ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.480 மற்றும் சீட்டு கட்டுகளை பறி முதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை