தொழில் அதிபர் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் 4 பேர் கைது


தொழில் அதிபர் வீட்டில்   நகை திருடிய வழக்கில் மேலும் 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 10:15 PM GMT (Updated: 11 Feb 2020 5:16 PM GMT)

சென்னை எழும்பூர் தொழில் அதிபர் வீட்டில் நகை திருடிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில் வசித்து வருபவர் கல்யாண்குமார். தொழில் அதிபரான இவரது வீட்டில் சமீபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு போய்விட்டது.

கல்யாண்குமார் தொழில் ரீதியாக வெளிநாடு சென்றுவிட்டார். வீட்டில் அவரது வயதான பெற்றோர்கள் மட்டும் இருந்தனர். அப்போது கள்ளச்சாவி மூலம் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிவிட்டனர்.

இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் கல்யாண்குமார் புகார் கொடுத்தார். இதன்பேரில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் சுப்பிரமணி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சேட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

இந்த வழக்கில் கல்யாண்குமார் வீட்டில் வேலை செய்த சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த ஷாலினி என்ற பெண் முதலில் கைது செய்யப்பட்டார். கல்யாண்குமார் வீட்டில் வேலை பார்த்த இன்னொரு வேலைக்காரப் பெண்ணான லோகநாயகி என்பவரும், அவருக்கு கள்ளச்சாவி தயாரித்து துணைபுரிந்த மேலும் 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வேலைக்காரப் பெண் லோகநாயகி உள்பட 4 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டது.

Next Story