மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை வேலையில்லாத விரக்தியில் விபரீத முடிவு + "||" + Sub-inspector's son commits suicide

சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை வேலையில்லாத விரக்தியில் விபரீத முடிவு

சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை  வேலையில்லாத விரக்தியில் விபரீத முடிவு
ஆவடியில் திருமணமாகியும் வேலையில்லாத விரக்தியில் இருந்து வந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,

ஆவடி கன்னிகாபுரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் முனியன். இவர் எஸ்.ஆர்.எம்.சி. பகுதியில் போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் அவினாஷ் (வயது 25). பி.சி.ஏ. பட்டதாரி. இவரது மனைவி அஸ்வினி (25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவினாசுக்கும், அஸ்வினிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, அவினாஷ் வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டில் சும்மா இருந்துள்ளார். இதனால் அவருடைய பெற்றோர்களும், மனைவியும் ‘வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டில் சும்மா இருக்கிறாயே?’ என்று திட்டியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அதிருப்தி அடைந்த அவினாஷ் சரியான வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் நேற்று காலை வீட்டின் அறையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 4 மாதத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.