மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது + "||" + Near Tanjore Sneaked by Mercenaries Five arrested

தஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது

தஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது
தஞ்சை அருகே பதுங்கி இருந்த கூலிப்படையினர் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய வீட்டில் கூலிப்படையை சேர்ந்த சிலர் பதுங்கி இருப்பதாக தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாசம், மோகன், ஏட்டுகள் இளையராஜா, சண்முகம், போலீஸ்காரர்கள் அருண், அழகு ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அங்கு சென்றனர்.


அப்போது அங்கு பதுங்கி இருந்த ெநல்லையை சேர்ந்த இசக்கி, திருச்சியை சேர்ந்த கார்த்தி, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜபாண்டி, அரியலூரை சேர்ந்த விக்னே‌‌ஷ், அம்மன்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து 5 பேரையும் போலீசார் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் தாலுகா போலீசார் 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...