ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாவு மில் உரிமையாளர் பலி


ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாவு மில் உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2020 3:15 AM IST (Updated: 12 Feb 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாவு மில் உரிமையாளர் பலியானார்.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாவு மில் உரிமையாளர் பலியானார்.

மாவு மில் உரிமையாளர் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் நடு தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 60). இவர் அப்பகுதியில் மாவு மில் நடத்தி வந்தார். இவர் நேற்று காலையில் ஆறுமுகநேரியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் சென்றபோது, சாலையின் குறுக்காக பெண் ஒருவர் ஓடிச் சென்றார். உடனே முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் ‘பிரேக்’ பிடித்து நிறுத்த முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

பலி 

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலையில் முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முருகானந்தமுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story