அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு


அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு
x
தினத்தந்தி 13 Feb 2020 3:00 AM IST (Updated: 12 Feb 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், 

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கிருந்து இந்தியா வந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். காற்றின் மூலமாக எளிதாக மற்றவருக்கு பரவும் இந்த வைரஸ் தாக்கம் ஒருவேளை ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் மருத்துவத்துறை தயாராக இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக ஆஸ்பத்திரியில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 13 படுக்கைகள் கொண்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதுவரை திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வைரஸ் தாக்கம் கண்டறியப்படவில்லை’ என்றார்.

Next Story