துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் 19-ந்தேதி நடக்கிறது


துணை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் 19-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 13 Feb 2020 3:30 AM IST (Updated: 12 Feb 2020 10:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் துணை மருத்துவம் சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை, 

சென்னை கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை, டான்சி கார்ப்பரேட் வளாகத்தில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ந்தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை துணை மருத்துவம் சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 10-க்கும் மேற்பட்ட துணை மருத்துவம் சார்ந்த தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. துணை மருத்துவ படிப்புகள், அறிவியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மற்றும் பட்டயபடிப்புகள் படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ்கள், சுயவிவர குறிப்புடன் வரவேண்டும். முன்பதிவு அவசியம் இல்லை. மேலும் விவரங்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் வி.வி‌‌ஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், ‘குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் காது கேளாத மாணவர்களுக்கு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள்(15-ந்தேதி) முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்துக்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story