மீன்பிடிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி படகுகள் கவிழ்ந்தது; 4 பேர் மீட்பு


மீன்பிடிக்க சென்றபோது   ராட்சத அலையில் சிக்கி படகுகள் கவிழ்ந்தது; 4 பேர் மீட்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 9:03 PM GMT (Updated: 12 Feb 2020 9:03 PM GMT)

மீஞ்சூர் அடுத்த பழவேற்காடு முகத்து வாரத்தில் கடலில் மீன்பிடிக்க சென்ற 3 படகுகள் ராட்சத அலை யில் சிக்கி கவிழ்ந்தது. இதில் நீரில் மூழ்கி தத்தளித்த 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூர் அருகே பழவேற் காட்டை சுற்றி 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு வசிக்கும் மீனவர்கள் படகு மூலம் ஏரியும் கடலும் கலக்கும் இடமான முகத்துவாரம் வழியாக சென்று கடலுக்கு சென்று மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் முகத்து வார பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடலின் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததால் ராட்சத அலைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் பழவேற்காடு சாத்தான்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த கோபி (வயது 28), பிரதாப் (25), பாஸ்கர் (38), சிவராஜ் (32) ஆகிய 4 மீனவர்கள், 3 பைபர் படகுகள் மூலம் பழவேற்காடு ஏரியின் வழியாக முகத்துவாரம் வழியாக கடல் பகுதிக்கு சென்றனர்.

3 படகுகள் கவிழ்ந்தது

அப்போது கடலில் திடீரென்று 20 அடி உயரத் திற்கு தோன்றிய ராட்சத அலைகளில் சிக்கியதில் 3 படகுகளும் கவிழ்ந்தது.

இதில் 4 மீனவர்கள் கடலுக் குள் விழுந்து அலையில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந் தனர்.

அப்போது, அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சில மீனவர்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த 4 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் 3 படகுகளும் மீட்கப்பட்ட நிலையில், அவை கடலில் கவிழ்ந்ததில், என்ஜீன்களில் சேதம் ஏற்பட்டு பழுதடைந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் சம்பவத்தன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடல் சீற்றத்தால் கடலுக்குள் செல்ல முடி யாமல் கரை திரும்பினர். மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்த சம்பவம் பழவேற் காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

Next Story