மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து + "||" + Fire in a real estate office

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து

ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து
நாகர்கோவிலில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
நாகர்கோவில், 

நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்தவர் மணி. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், வெட்டூர்ணிமடத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்தனர். எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஏ.சி., மற்றும் மேஜைகள் தீயில் எரிந்து நாசம் ஆகின. மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட அலுவலகம் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இருப்பதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குஜராத்தில் 14 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
சூரத்தில் 14 மாடிகள் கொண்ட ஜவுளி வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
2. ரஷ்யாவில் மர வீட்டில் தீ விபத்து; 11 பேர் பலி
ரஷ்யாவின் சைபீரியா நகரில் மர வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகி உள்ளனர்.
3. பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து; ஆவணங்கள் எரிந்து நாசம்
பெங்களூருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் 4-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ஆவணங்கள் எரிந்து நாசமானது.
4. வெம்பக்கோட்டை அருகே, அனுமதியின்றி பட்டாசு கருந்திரி தயாரித்த பெண் கருகி சாவு
அனுமதியின்றி கருந்திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழந்தார். கொசு பேட்டில் இருந்து தீப்பொறி பறந்ததால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
5. டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து
டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அனோஜ் மண்டி பகுதியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை