விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் காயம் அடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 14 Feb 2020 3:30 AM IST (Updated: 13 Feb 2020 9:23 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் தாலுகா குட்டுப்பட்டி அருகேயுள்ள கும்பிளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னு (வயது 55).

திண்டுக்கல், 

நத்தம் தாலுகா குட்டுப்பட்டி அருகேயுள்ள கும்பிளிப்பட்டியை சேர்ந்தவர் சின்னு (வயது 55). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், பாதிக்கப்பட்ட சின்னுவுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.12 லட்சத்து 7 ஆயிரத்து 778 இழப்பீடு வழங்கும்படி தீர்ப்பளித்தார். ஆனால், அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை. இதனால் சின்னு, கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்வதற்காக திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

Next Story