மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் கைது + "||" + 2 boys arrested for stealing

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் கைது

திருவள்ளூர் அருகே  வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் கைது
திருவள்ளூர் அருகே வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியை சேர்ந்தவர் ராமகிரு‌‌ஷ்ணன். இவரது மகன் பேச்சிமுத்து (வயது 25). இவர் மப்பேடு கூட்டு சாலை பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பேச்சிமுத்து தன் வீட்டில் கடையில்  வசூலான பணத்தை வைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவர் வீட்டில் இருந்து 2 சிறுவர்கள்  ஓடினார்கள்.

இதைபார்த்து சந்தேகம் அடைந்த அவர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில்  கூறினார்கள். பின்னர் அந்த 2 சிறுவர்களும் பேச்சிமுத்து வீட்டில் இருந்து  திருடிய ரூ.1,200-ஐ திருடியதை ஒப்புக்கொண்டனர்.

இதுகுறித்து பேச்சிமுத்து மப்பேடு போலீசில் புகார் செய்தார். விசாரணையில் திருவள்ளூர் அடுத்த பண்ணூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மற்றும் மொளச்சூரை சேர்ந்த 14 வயதுடைய சிறுவர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.