தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2020 9:45 PM GMT (Updated: 13 Feb 2020 7:48 PM GMT)

தூத்துக்குடியில் கிராம சுகாதார செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதாரத்துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ்நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அரசு கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் பொன்.சாந்தகுமாரி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் வெரோனிக்கா, செயலாளர் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தை எளிமைப்படுத்தி, கர்ப்பிணிகளுக்கு எளிதில் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதிய முரண்பாடு மற்றும் பதவி உயர்வில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதில் தூத்துக்குடி கிராம சுகாதார செவிலியர் சங்க செயலாளர் மகேசுவரி, கோவில்பட்டி கிராம சுகாதார செவிலியர் சங்க தலைவர் மகாலட்சுமி, செயலாளர் ரெங்கநாயகி, பொருளாளர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story