தர்மபுரியில் மொபட்டில் சென்ற அரசு ஊழியரிடம் நகை பறிப்பு


தர்மபுரியில் மொபட்டில் சென்ற அரசு ஊழியரிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2020 3:44 AM IST (Updated: 14 Feb 2020 3:44 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் மொபட்டில் சென்ற அரசு ஊழியரிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் கிரிஜாசங்கரி (வயது 36). இவர் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கிரிஜாசங்கரி தர்மபுரி அழகாபுரி பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.

திடீரென அவர்கள் கிரிஜா சங்கரியை வழிமறித்து அவருடைய கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து சென்றனர். இதில் அவருடைய கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக கிரிஜா சங்கரி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரிடம் நகையை பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story