மாவட்ட செய்திகள்

கிரு‌‌ஷ்ணகிரி தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு + "||" + In the Krishnagiri taluk Voter list Edit tasks Officer eyewitness study

கிரு‌‌ஷ்ணகிரி தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு

கிரு‌‌ஷ்ணகிரி தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் அதிகாரி நேரில் ஆய்வு
கிரு‌‌ஷ்ணகிரி தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி தாலுகா தாளப்பள்ளி ஊராட்சி காமராஜர் நகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மேல்புதூர், அகசிப்பள்ளி ஊராட்சி கனகமுட்லு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து பொதுமக்கள் அளித்த மனுவில் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இது குறித்து மதிவாணன் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,858 வாக்குச்சாவடிகளில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது குறித்து ஆன்லைன் மூலம் 6,537 மனுக்களும், வாக்குச்சாவடி மையங்களில் 48 ஆயிரத்து 480 மனுக்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 17 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இவ்வாறு மனு அளித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

இந்த ஆய்வின் போது காமராஜர் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சக்திவேல் என்பவரிடம் விசாரணை செய்து, அவரது மனைவி பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதிவாணன் புதிய மனு அளிக்க அறிவுறுத்தியதுடன், அவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கவும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வில் கிரு‌‌ஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகி, ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அமீர்பா‌ஷா, கிரு‌‌ஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர், தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன், துணை தாசில்தார்கள் குருநாதன், சின்னசாமி, வருவாய் ஆய்வாளர் சக்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழரசி, ஆனந்தராஜ், சதீ‌‌ஷ் மற்றும் வாக்கு சாவடி அலுவலர்கள் உடனிருந்தனர்.