மராத்தியில் நம்பர் பிளேட் பொருத்திய வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்


மராத்தியில் நம்பர் பிளேட் பொருத்திய    வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது   மந்திரி சுபாஷ் தேசாய் தகவல்
x
தினத்தந்தி 13 Feb 2020 10:39 PM GMT (Updated: 13 Feb 2020 10:39 PM GMT)

மராத்தியில்எழுதப்பட்டநம்பர் பிளேட் பொருத்திய வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என மந்திரிசுபாஷ் தேசாய் கூறியுள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் பல வாகனங்களில் மராத்தி எண்களில் எழுதப்பட்ட நம்பர் பிளேட்டுகளை அதன் உரிமையாளர்கள் பொருத்தி உள்ளனர். பல அரசியல் பிரமுகர்கள் கூட அவர்களின் வாகனங்களில் மராத்தி எண்களில் எழுதப்பட்ட நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். எனினும் மோட்டார் வாகன சட்டத்தின்படி இது விதிமுறை மீறல் ஆகும். வாகன நம்பர் பிளேட்டுகள் ஆங்கிலத்தில் தான் எழுதி இருக்க வேண்டும்.

இதேபோல 1995-ம் ஆண்டு மத்திய அரசு பம்பாய் நகரை, மும்பை என பெயர் மாற்றியது. எனினும் மும்பையில் உள்ள பம்பாய் ஐகோர்ட்டு, பம்பாய் ஐ.ஐ.டி. இன்னும் பழைய பெயர்களில் தான் அழைக்கப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை இல்லை

இந்தநிலையில் இதுகுறித்து மாநில மராத்தி மொழி மந்திரி சுபாஷ் தேசாய் கூறியதாவது:-

வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் மராத்தி எண்ணில் எழுதப்பட்டு இருந்தால் அதன் உரிமையாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

இதேபோல பம்பாய் ஐகோர்ட்டின் பெயரையும், மும்பை ஐகோர்ட்டு என மாற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story