திருவாரூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் ஊழியர்கள் 21 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் நடவடிக்கை


திருவாரூர் மாவட்டத்தில், நெல் கொள்முதல் ஊழியர்கள் 21 பேர் பணியிடை நீக்கம் - கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Feb 2020 10:45 PM GMT (Updated: 14 Feb 2020 7:18 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய ஊழியர்கள் 21 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 463 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தலைமை அலுவலக விழிப்பு பணிக்குழு தலைமையிலான சிறப்பு ஆய்வுக்குழுவினர் 2 நாட்கள் ஆய்வு செய்தனர்.

இதில் ஒரு சில நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் தர வேறுபாடு, மூட்டைகளில் எடை அளவு குறைபாடு போன்றவை கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொள்முதல் நிலையங்களில் விதிமுறைகளை மீறி நெல் கொள்முதல் செய்த மேலப்பனையூர் பட்டியல் எழுத்தர் ஹாஜாமைதீன், உதவியாளர் எஸ்.செந்தில்குமார், மேலமருதூர் பட்டியல் எழுத்தர் ஜோதிமணி, உதவியாளர் மகாதேவன், சேரன்குளம் பட்டியல் எழுத்தர் சரவணன், உதவியாளர் செல்வகுமார். திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் பட்டியல் எழுத்தர் பார்த்தீபன், பிச்சன்கோட்டகம் பட்டியல் எழுத்தர் கண்ணன், சாத்தனூர் பட்டியல் எழுத்தர் கண்ணதாசன், உதவியாளர் கார்த்தி, புலவர்நத்தம் பட்டியல் எழுத்தர் வீரசேகர், உதவியாளர் சக்திவேல், ஆண்டாங்கோவில் பட்டியல் எழுத்தர் இளையராஜா, உதவியாளர் பாக்கியராஜ், சித்தன்வாழூர் பட்டியல் எழுத்தர் பாலஸ்ரீதர், உதவியாளர் வி.செந்தில்குமார், நன்னிலம் பட்டியல் எழுத்தர் எம்.செந்தில்குமார், நல்லமாங்குடி பட்டியல் எழுத்தர் சரண்ராஜ், சேங்கனூர் பட்டியல் எழுத்தர் பாலாஜி, குவளைக்கால் பட்டியல் எழுத்தர் முருகையன், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு பட்டியல் எழுத்தர் ரவிச்சந்திரன் ஆகிய 14 பட்டியல் எழுத்தர்கள், 7 உதவியாளர்கள் என மொத்தம் 21 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் 21 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவாரூர் மாவட்ட அரசு அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story